Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பட்டியில் இருந்த ஆடுகள் …. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. தீவிர விசாரணை ….!!

காட்டு விலங்குகள் கடித்து 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓலைப்பாடி கிராமத்தில்  தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து  100-க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென ஆட்டு பட்டியில் இருந்த 60 செம்மறி ஆடுகள், 7 குட்டிகள் போன்றவை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தகவலின்படி வருவாய் ஆய்வாளர் அள்ளி, கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ் காந்தி மற்றும் மருத்துவ குழுவினர்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஆடுகளை சோதனை செய்தனர். அதில் மர்மமான காட்டுவிலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |