Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பட்டையை கிளப்புது ‘புஷ்பா’…. “உங்க நடிப்பு சூப்பரோ சூப்பர்!”…. அல்லு அர்ஜூனை புகழ்ந்து தள்ளிய இயக்குனர்….!!!!

உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான “புஷ்பா” திரைப்படம் ஒரு மாதத்திற்குள்ளேயே ரூ.300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. மேலும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பை பார்த்து மிரண்டு போன தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பீஸ்ட் மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் “புஷ்பா” படத்தையும், அதில் அல்லு அர்ஜுனின் நடிப்பையும் புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அந்த பதிவை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன் நன்றியை தெரிவித்து கொண்டதோடு, பதிலுக்கு உங்களுடைய ‘டாக்டர்’ திரைப்படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நெல்சன் திலீப்குமார் ‘டாக்டர்’ படத்தை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று டுவிட் பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |