விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல 2 காதல் படத்தின் டீசர் ஒரே நாளில் யூட்யூபில் 1 கோடி வியூஸ்ஸை கடந்து ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாராவுடன் நடித்த காத்துவாக்குல 2 காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரவுடி பிக்சர் தயாரித்துள்ளது. இந்த சூழலில் விஜய் சேதுபதி பெட்டில் படுத்திருக்க ஒரு பக்கம் நயன்தாராவும், மற்றொரு பக்கம் சமந்தாவும் மாற்றி மாற்றி அவரை இடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதேபோல் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் சமந்தா மற்றும் நயன்தாராவிடம் தனது காதலை சொல்வதுபோல காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான டீசர்ட் 11ஆம் தேதி யூட்யூபில் வெளியாகியுள்ள நிலையில் அது ஒரே நாளில் ஒரு கோடி வியூஸ்ஸை கடந்துள்ளது. இதற்கிடையே KRK பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து விக்னேஷ் ஷிவன் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.