பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில் பலரும் இதற்கான மாற்று வழி என்னவென்று யோசித்து வருகின்றனர். எரிவாயு பயன்பாட்டையும் நாடாமல் அதேநேரம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருக்க மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களை சரியானது என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. மத்திய அரசு வாகனத் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு புதிய கொள்கைகளையும், திட்டங்களையும், அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2,500 ரூபாய்க்கு இஎம்ஐ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 சதவிகிதம் வட்டியில் ரூபாய் 5,000 முன் பணமாக செலுத்தி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெற்றுக்கொள்ளலாம். https:// heroelectric.in/ emi-calculator/ என்ற வெப்சைட்டில் சென்று உங்களுக்குப் பிடித்தமான ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், அவற்றின் விலை, கடன் தொகை, இஎம்ஐ, காலவரம்பு போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.