Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டைய கிளப்பும் ‘மாநாடு’ ஃபர்ஸ்ட் லுக்… வெளியிட்ட சிம்பு… வைரலாக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு அசத்தலாக  நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக  நடித்துள்ளார் . மேலும் இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சிம்பு இஸ்லாமிய தோற்றத்துடன் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்க பிரார்த்தனை செய்வது போல் அமைந்துள்ளது. இதனை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |