இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திக்கை வழிமறித்துள்ளனர். அதன்பிறகு தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கார்த்திக்கை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து அம்பத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் கார்த்திக் என்பவர் சில மர்ம கும்பல்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலின் போது கார்த்திக்கின் தம்பி வெங்கடேசனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சண்முகம் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்நிலையில் சண்முகத்தை பழி வாங்குவதற்காக அவருடைய தம்பி கார்த்திகை வெங்கடேஷ் அவருடைய கூட்டாளிகளுடன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் குற்றவாளிகள் 9 பேரையும் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.