Categories
கிரிக்கெட் விளையாட்டு

பட்லர் அதிரடி….. ராஜஸ்தான் அணி 222 ரன்கள் குவிப்பு…..!!!!

டெல்லி அணியின் வெற்றிக்கு 223 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது.

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34-வது லீக் போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 116 ரன்களையும் படிக்கல் 54 ரன்களையும் சாம்சன் 46 ரன்களையும் குவித்தனர். இதைத்தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

Categories

Tech |