நடிகர் சூர்யா நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் சூர்யா நேற்று சமூக வலைதளம் வாயிலாக தனது ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘முதலில் ஜெய்பீம் பட தலைப்பின் உரிமையை பா.ரஞ்சித் தான் வைத்திருந்தார். அவரிடம் நான் சென்று கேட்டபோது எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஜெய்பீம் எல்லோருக்கும் சொந்தமானது தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார். அவருக்கு நன்றி’ என கூறியுள்ளார்.