நடிகை அதுல்யா புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு நான்கு முறை சிறந்த படத்துக்கான விருதினை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இந்நிலையில் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகும் போது ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்த அதுல்யா அடுத்தடுத்து சமுத்திரக்கனி ,சுசீந்திரன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்ததால் ,தான் முன்னணி நடிகையாகிவிட்டோம் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுவிட்டது .எங்கள் திரைப்படம் சர்வதேச விருது பெற்ற செய்தியை கூட அதுல்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட மறுத்துவிட்டார் என்றனர் . மேலும் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் சம்மந்தப்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டே ஆக வேண்டும் என நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று பட தயாரிப்பாளர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.