Categories
சினிமா

பட வாய்ப்புகளை பிடிக்க இப்படியா பண்ணனும்?…. சர்ச்சையில் சிக்கிய மீரா ஜாஸ்மின்….!!!!

தமிழில் விஜய் உடன் புதிய கீதை, மாதவனுக்கு ஜோடியாக ரன், விஷால் உடன் சண்டக்கோழி ஆகிய திரைப்படங்களில் நடித்த மீராஜாஸ்மின் மலையாள திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். இவர் கடந்த 2014ல் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இப்போது அவருக்கு 40 வயதாகும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டுமாக நடிக்க வந்துள்ளார். மலையாள படம் ஒன்றில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதற்கிடையில் அவர் பட வாய்ப்புகளை பிடிக்க தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அதாவது உள்ளாடையுடன் மட்டும் தன்னை படம்பிடித்து மீராஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கவர்ச்சி புகைப்படமானது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவர் அழகாக இருப்பதாக பாராட்டி உள்ளனர். அதே நேரம் மற்றொரு புறம் இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடுவீர்களா..? என கேலி செய்தும், விமர்சித்தும் பலர் கண்டன பதிவுகள் வெளியிட்டு இருக்கின்றனர்.

Categories

Tech |