தமிழில் ரஜினிகாந்துடன் காலா, அஜித்குமாரின் விஸ்வாசம், சுந்தர் சி.யின் அரண்மனை உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். இப்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்கிடையில் பட வாய்ப்பிற்காக சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுவதாக விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக சாக்ஷி அகர்வால் பேட்டி அளித்ததாவது ”நான் இப்போது பஹிரா, நான் கடவுள் இல்லை என்ற 2 திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன்.
அத்துடன “கெஸ்ட்-சாப்டர் 2″ எனும் திகில் கதையில் நாயகியாக நடித்து வருகிறேன். அறிமுகம் இயக்குனர் விக்கி இயக்கத்தில் தயாராகிவரும் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாகவும், கந்தகோட்டை படத்தை இயக்கிய சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடிக்கிறேன்.
அதன்பின் 2 மலையாள படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். இதனிடையில் நான் பட வாய்ப்புக்காக சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடவில்லை. எனது சமூகவலைதள பக்கத்தை கிட்டத்தட்ட 2 மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின் தொடர்கின்றனர். இவர்கள் உடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன். மேலும் சமூகம் பற்றிய ஆக்கபூர்வமான விஷயங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்” என்று கூறினார்.