Categories
உலக செய்திகள்

பணக்காரர்களுக்கு மட்டுமே குடியுரிமை?…. பாகிஸ்தானின் பலே திட்டம்…. கசிந்த சீக்ரெட்….!!!!

பாகிஸ்தான் அரசு பணக்கார வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யவே இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டினர் இந்த புதிய சலுகையின் கீழ் பாகிஸ்தானில் நட்சத்திர வீடுகள், வீடுகள் மட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் முதலீடு செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி காரணமாக வெளியேறி வரும் பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களை குறிவைத்தே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அமெரிக்கா, கனடா மற்றும் சீனாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கும் பாகிஸ்தான் அரசு இந்த சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |