பணத்திற்காக கிராம உதவியாளரே கொலை செய்ய முயன்ற சம்பமானது அப்பகுதியியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை பகுதிக்கு அருகே அமைந்துள்ள புல்லந்தை கிராமத்தை சேர்ந்தவரான 45 வயதுடைய சந்தானகுமார். இவர் மனைவி 43 வயதுடைய முத்துலட்சுமி, இவரது மகன்கள் 18 வயதுடைய காளீஸ்வரன் 10 வயதுடைய சதீஸ்வரன் என்ற இரு மகன்கள் உள்ளன. சந்தனகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், மனைவி முத்துலட்சுமி தன் இரு மன்களுடன் வசித்து வந்தார் .
மனைவி முத்துலட்சுமி மகளிர் மன்ற கூட்டத்திற்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில், இளையமகன் சதீஸ்வரன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் புல்லந்தை கிராம உதவியாளரும் , சந்தானகுமாரின் உறவினருமான 32 வயதுடைய சந்திரசேகர் என்பவர் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்தார். சிறுவன் சத்தீஸ்வரனிடம் வீட்டின் பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளார் .சிறுவன் சாவியை தர மறுத்ததால் அவனை கத்தியால் குத்தி, சிறுவனை ஒரு அறையில் அடைத்து வைத்தார்.
இந்நேரத்தில் வீடு திரும்பிய முத்துலட்சுமி ,சந்திரசேகரை கண்டவுடன் சுதாரித்துக் கொண்டார். ஆனால் சந்திரசேகரன் முத்துலட்சுமியின் கழுத்தை கத்தியால் குத்தினார். இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் சந்திரசேகரனை மடக்கிப்பிடித்து ,ஏர்வாடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றன. இதில் காயமடைந்த இருவரையும் ,ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏர்வாடி போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர் .
சந்திரசேகர் கீழக்கரை பகுதியில் உள்ள தனியார் நகை அடகு கடையில் நகையை வைத்து பணம் வாங்கியதாகவும், அந்த நகையை திருப்புவதற்காக அந்த நிறுவனத்திடமிருந்து கடிதம் வந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக பண நெருக்கடியில் உள்ள சந்திரசேகர், முத்துலட்சுமி வீட்டிற்குச் சென்று திருடும் முயன்றதாக போலீசார் விசாரணையில் தெரிந்தது. கிராம உதவியாளர் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.