Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பணத்திற்கு ஆசைப்பட்ட தந்தை….. 13 வயது சிறுமிக்கு திருமணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கூலி தொழிலாளியான வரதராஜ்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரதராஜ் 13 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கு சிறுமியின் தந்தையும், வரதராஜன் தங்கை முத்துலட்சுமி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் வரதராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அதாவது மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிறுமியின் தந்தை பணமில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனை எடுத்து தொடர்ந்து மது குடிப்பதற்கு பணம் கிடைக்கும் என்ற ஆசையினால் தனது மகளை வரதராஜுக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமியின் தந்தை மற்றும் முத்துலட்சுமி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் குழந்தை திருமணம் பற்றி அறிந்தால் சைல்டு லைன் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098-ஐ பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |