முதியவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டத்தில் இருக்கும் அகதிகள் முகாமல் பெரியசாமி(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெரியசாமியின் வீட்டிற்கு அருகே வசிக்கும் சுமன் என்பவர் முதியவரின் கழுத்தை நெரித்து 6000 ரூபாயை பறித்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுமனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து நீதிபதி வாலிபருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.