இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது அவசியமான ஒன்றாக இருந்தாலும் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை எப்படி இருமடங்காக மாற்றுவது என்பதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் இது போன்ற திட்டங்கள் வங்கிகளில் மட்டுமல்லாமல் தபால் துறையையும் முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த தபால் அலுவலகங்கள் கிராமப்புறங்களிலும் இருப்பதால் இந்த சேவை அதிகப்படியான மக்களிடையே சென்று சேர்ந்துள்ளது. தபால் துறை வழங்கும் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்று கிசான் விகாஸ் பத்திர திட்டம்.
இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் முதலீடு செய்யும் பணம் உங்களுக்கு இருமடங்காக கிடைக்கும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.9 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இந்த வட்டியை வைத்துக் கொண்டால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை சுமார் பத்து வருடங்களில் இரு மடங்காக மாறிவிடும். எடுத்துக்காட்டாக இப்போது 10 லட்சம் முதலீடு செய்தால் பத்து வருடங்களில் 20 லட்சமாக மாறும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 இல் இருந்தும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த ஒரு வரம்பும் கிடையாது. இந்தத் திட்டத்தை தொடங்கும் முதலீட்டாளர்கள் 18 வயதை கடந்து இருக்க வேண்டும்.