Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி… சைபர் கிரைம் போலீசாரை பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு….!!!!!

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தல், கடன் அட்டை செயலாக்கம் செய்ய லிங்கை பயன்படுத்துவதன் மூலம் மோசடி, ஜிபே போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளில் மோசடி உள்ளிட்ட பல்வேறு விதமாக மோசடிகளில் பாதிக்கப்பட்டு இதுவரை 41 பேர் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக அந்த 41 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்பதற்காக சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணையின் போது மோசடி செய்தவர்கள் மோசடியாக பெற்ற பணத்தை திரும்ப வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி அவர்களிடமிருந்து சைபர் கிரைம் போலீசார் ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843-ஐ மீட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பணத்தை இழந்த நபர்களிடம் மீண்டும் பணத்தை ஒப்படைத்துள்ளார்.

அதன்பின் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது,  பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து பண பரிமாற்றம் நடைபெற்ற வங்கியில் இருந்து மீட்க உதவியாக இருக்கும். மேலும் சைபர் கிரைம் போலீசார் இந்த வருடம் 27 வழக்குகளில் 21 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இன்டர்நெட் மற்றும் ஆன்லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை நம்பி  ஏமார்ந்து விட வேண்டாம். பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |