பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்ணாகரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரான கணேஷ் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருக்கும் வங்கியில் இருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து பணத்தை ஸ்கூட்டரில் வைத்துவிட்டு பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் கணேஷ் பிரபு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.
இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரின் சீட்டை சேதப்படுத்தி மர்ம நபர்கள் 2 லட்ச ரூபாயை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கணேஷ் பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணத்தை திருடி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.