சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பாரதி நகரில் தயாளமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் பிரியா, மகன் டேனியல் சம்பத் ஆகியோரும் உயிரிழந்துவிட்டனர். இரண்டாவது மகளான தீபா அவரது கணவர் ரவி ஆகியோருடன் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். தற்போது தயாளமூர்த்தி சென்னை நங்கநல்லூரில் இருக்கும் முதியோர் இல்லத்தில் தங்கி வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தயாள மூர்த்தி தனது மருமகன் ரவிக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ரவி 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வரை தயாளமூர்த்தியிடம் திரும்ப கொடுத்துவிட்டார். மீதமுள்ள 65 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் ரவி காலம் தாழ்த்திவந்துள்ளார். இதுகுறித்து தயாளமூர்த்தி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ரவி தரவேண்டிய 65 ஆயிரம் ரூபாய் பணத்தை உடனடியாக முதியவரிடம் பெற்று கொடுத்துள்ளார்.