Categories
மாநில செய்திகள்

எச்.ராஜா மீது பரபரப்பு புகார்…. அரசியலில் அதிர்ச்சி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற முனைப்போடு செயல்பட்ட அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளனர் .

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தை செலவழிக்காமல் எச்.ராஜா சுருட்டி கொண்டதாக பாஜக மூத்த நிர்வாகி சந்திரன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேலும் சுப்பிரமணியபுரத்தில் 4 கோடி ரூபாய் செலவில் சொகுசு வீடும், எருமைப்பட்டியில் எச்.ராஜாவுக்கு சொந்தமாக பண்ணை வீடும் கட்டி வருவதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |