பெண்ணை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூடாமணிபுரம் பகுதியில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி எந்த மகள் உள்ளார். இந்நிலையில் சசி தன்னுடன் வேலை பார்த்த தெய்வராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். அதனால் தெய்வராஜிக்கு சசி 4 பவுன் தங்க நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெய்வராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சசி தனது நண்பர்கள் மூலம் தெய்வராஜை தொடர்புகொண்டு தான் கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தெய்வராஜ் சசியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி பூபதி என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வீட்டிலிருந்த 29 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 23 பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து சசியின் தாய் லதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.