Categories
மாநில செய்திகள்

பணத்தை மாத்தி அனுப்பிட்டீங்களா….? இதைச் செய்தால் மட்டும் போதும்…. ஈசியா வாங்கிடலாம்….!!!!

உங்களுடைய பணத்தை வேறு ஒரு அக்கவுண்டுக்கு நீங்கள் மாற்றி அனுப்பி விட்டால் அதைத் திரும்ப பெறுவதற்கான வழியை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

இப்போது அனைத்துமே ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. பணம் அனுப்புவதும் பெறுவதும் எளிதாகிவிட்டது. இதற்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே ஆன்லைன் தான். ஆனால் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் நமக்கு உதவியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் பல சிக்கல்களும் உள்ளது. சில நேரங்களில் வங்கி கணக்குபதிவிட்டு வேறு யாருக்கோ பணம் அனுப்பிவிடுவோம். அப்படி உங்களுக்கே தெரியாமல் தவறுதலாக வேறொரு வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வீர்கள்?

நீங்கள் தெரியாமல் மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டீர்கள் என்று தெரிந்தவுடன் உடனடியாக உங்களது வங்கிக்கு அதை தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக புகார் அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் சேவை எண்ணை அழைத்து முழுவிவரத்தையும் விளக்கமாக தெரிவிக்க வேண்டும். பரிவர்த்தனை நடைபெற்ற தேதி,  நேரம், உங்களது கணக்கு எண் மற்றும் தவறுதலாக மாற்றப்பட்ட கணக்கு எண் போன்ற விவரங்களை கூற வேண்டும். சில நேரங்களில் செல் நம்பர் கிடைத்தால் அதை வைத்து கேட்கலாம்.

ஒருவேளை அவர் பணத்தை திருப்பித் தர மறுக்க வாய்ப்புள்ளது. அப்போது என்ன செய்வீர்கள்? பணம் அனுப்பப்பட்ட விவரங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். பணத்தை திருப்பித் தராத நிலையில் அது ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறும் செயல். அதேநேரம் பணம் அனுப்பும் பொழுது சரியான பயனாளிகளின் கணக்கு எண் மற்றும் பிற விவரங்களை வழங்குவது பணம் செலுத்துபவரின் பொறுப்பு ஆகும். எனவே பணம் அனுப்புபவர்தான் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அதேபோல, தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தை பயனாளிக்கே திருப்பித் தரவேண்டிய பொறுப்பு வங்கிகளுக்கு உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி அதை வலியுறுத்துகிறது.

Categories

Tech |