Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணத்தை ஏமாற்றிய பெண் ஊழியர்… நீதிமன்றத்தின் தீர்ப்பு… மேல்முறையீடு மனு தள்ளுபடி…!!

நடத்துனரிடம் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றிய வணிகவரித்துறை பெண் ஊழியருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் பவர்ஹவுஸ் தெருவில் தயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தேனி வணிகவரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த லதா கடந்த 2019ஆம் ஆண்டு தயாளனிடம் 5லட்சம் ரூபாய் தொகையை கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து கடந்த மாதத்திற்கு முன்பு லதா அந்த தொகைக்கான காசோலையை தயாளனிடம் கொடுத்துள்ளார்.

இதனைதொடர்ந்து தயாளன் அந்த காசோலையை தனது வங்கி கணக்கிற்கு செலுத்த வங்கிக்கு சென்றபோது லதாவின் வங்கி கணக்கில் போதுமான அளவிற்கு பணம் இல்லை என கூறி அந்த காசோலையை தள்ளுபடி செய்துள்ளனர். இதற்கிடையே லதா தேனியில் இருந்து திண்டுக்கல் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு மாறுதலாகி சென்றுவிட்டார். இதுகுறித்து தயாளன் லதாவிற்கு வக்கீல் மூலம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் தயாளன் தேனி நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணம் வங்கி கொண்டு திருப்பி கொடுக்காததால் லதாவுக்கு 10 மாதங்கள் சிறை தண்டனையும், தயாளனிடம் கொடுக்க வேண்டிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து தரவேண்டும் எனவும் தீர்பளித்து உத்தரவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து லதா இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி வெங்கடேசன் லதா அளித்த மனுவை தள்ளுபடி செய்து நடுவர் விரைவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |