Categories
தேசிய செய்திகள்

பணத்தை மோசடி செய்வது இவர்கள்தான்…. சம்பித் பத்ரா குற்றச்சாட்டு….!!!!

பாஜக செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி  முதல் மந்திரியின்  நோக்கமும், அவரின் நேர்மையும் மாசுபட்டு விட்டது. இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களை பொருத்தவரை இவர்கள் செய்வது மிகப் பெரிய ஊழல் வழக்கு. ஏனென்றால் கட்டுமான தொழிலாளர்களுக்காக பணி புரியும் 3  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களது பதிவில் பெரும் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து கடந்த 15 ஆண்டில்  இது வரை சுமார் 13 லட்சம்  தொழிலாளர்கள் மாநில அரசின் தொழிலாளர் துறையில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் கட்டுமான தொழிலாளர்கள் துறையில் 2 லட்சம் போலி பதிவுகள் இருப்பது நடைபெற்ற விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் 65 ஆயிரம் தொழிலாளர்கள் ஒரே செல்போன் நம்பரையும், 15 ஆயிரத்து 700 பேர் ஒரே முகவரியையும், 4,370 பேர் ஒரே நிரந்தர முகவரியையும் அளித்துள்ளனர். இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை  டெல்லி அரசு பறித்து அதனை ஆம் ஆத்மி  கட்சி தொடர்பான பணிகளுக்கு செலவழிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |