Categories
உலக செய்திகள்

“பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கு”…. அமலாக்கத்துறையின் திடீர் சோதனை…. தலைமறைவான விவோ இயக்குனர்கள்…..!!!!

பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அமலாக்கதுறையினர் 44 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து சீனாவை சேர்ந்த விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜெங்சென் மற்றும் ஜாங் ஜி போன்றோர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை அடுத்து விவோ இயக்குனர்கள் தலைமறைவாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் விவோ குறித்த வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு விசாரிக்க வேண்டும் எனவும் சீன நிறுவனம் என்பதால் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும் சீனஅரசு இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |