Categories
தேசிய செய்திகள்

பணமதிப்பிழப்பு…. இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள்…. ட்ரெண்டிங்….!!!

நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று கருப்புபணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கும் மத்திய அரசு வெளியிட்டது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 3 மாதங்களுக்கு மேல் பொதுமக்கள் பணம் இல்லாமல் தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்காக பலர் காத்திருந்தனர். அதனால் சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

பின்னர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிக்கப்படும், கள்ளநோட்டு பழக்கமும் தவிர்க்கப்படும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்டு இந்திய பொருளாதாரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் கூறினார். எனவே நாட்டின் எதிர்காலத்திற்காக 50 நாட்களுக்கு பொதுமக்கள் சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நடவடிக்கைக்கு ஒருசாரார் வரவேற்பையும், பலர் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வந்தனர். இதையடுத்து பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளை எதிர்க்கட்சிகள் கருப்பு நாளாக கருதுகின்றனர். ஆனால் பாஜகவினர் மட்டும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் Black day indian economy என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |