1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டு இன்று 6 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்னதான் என்பது குறித்து உண்மை எப்போது தான் தெரியவரும் என்று இதுவரையிலும் தெரியவரவில்லை.
கடந்த 2016ம் வருடம் நவம்பர் 8ம் தேதி மத்திய அரசானது ஆயிரம் மற்றும் 500ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவித்தது. இதன் காரணமாக கருப்புப் பணம் ஒழியும், கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருந்து வெளியேறும் என பல வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்து இருந்தது. எனினும் அதெல்லாம் நடந்ததா..?
கருப்புப் பணத்தை ஒழிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும், தீவிரவாத்தை ஒழிக்கும், ரொக்கப் பணத்தை நம்பியிருக்கும் சூழல் குறையும் என்றெல்லாம் மத்தியஅரசு தெரிவிக்கிறது. இருப்பினும் இந்தநோக்கம் நிறைவேறியதா என்பது தான் மக்கள் வைக்கும் கேள்வியாகவுள்ளது.