Categories
தேசிய செய்திகள்

பணமோசடி நடந்தால் இதை பண்ணுங்க…. டிஎஸ்பி சொன்ன அசத்தல் செய்தி…!!!!!

ஏடிஎம்களில் பண மோசடிகளில் ஈடுபடும் நபர்களை தடுப்பது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஏடிஎம் அட்டையை ரெனிவல் செய்ய வேண்டும் வங்கிக் கணக்குகளை  ரெனிவல் செய்ய வேண்டும் என அலைபேசியில் அழைத்து வங்கி கணக்குகளின் ரகசியத்தை பெற்று, தொடர்ந்து நாள்தோறும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்வது தொடர்கதை ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க வங்கி நிர்வாகம் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்ட பின்பும் தொடர்ந்து பல மோசடிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இதை அனைத்தையும் தடுக்கும் விதமாக சைபர்கிரைம் காவல்துறையினர் 1930 என்ற இலவச அலைபேசி எண்ணை வெளியிட்டிருக்கின்றனர். இதுதொடர்பாக பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் காவலர்களுக்கு பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் முத்துக்குமார் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் மோசடி செய்த பணத்தை பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை மீட்டு எடுப்பது எப்படி என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

மேலும் இதுபோன்று நூதன மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் வரும்போது அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எனவும் உடனடியாக காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் அதில் கூறப்பட்டது. மேலும் வங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் பணம் பறி போகும் போது பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக 1930 என்று நம்பரை தொடர்பு கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |