பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையமானது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த பறக்கும் படையில் ஒரு அரசு அதிகாரியும், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 கான்ஸ்டபிள் மொத்தமாக ஐந்து பேர் இப்பணியில் இருப்பர். இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி பணிபுரிந்து தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு 3 குழுக்களின் வீதமாக மொத்தம் 21 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பறக்கும் படை அதிகாரியான மாணிக்கவாசகம் தலைமையில் அமைத்த குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இக்குழுவானது நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்கள், லாரிகள் , கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகிய ஒவ்வொரு வாகனங்களும் தீவிரமாக சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.