Categories
கொரோனா தேசிய செய்திகள்

பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்…? தொழிலதிபரின் அதிரடி முடிவு…. குவியும் பாராட்டுக்கள்…!!

வறுமையில் இருப்பவர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை எடுக்க உதவும் விதமாக தொழிலதிபர் ஒருவர் தனது அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றி கொடுத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது

சூரத்தை சேர்ந்த 63 வயது உள்ள காதர் ஷைக் சென்ற மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் அதிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சொந்தமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவரது மருத்துவ செலவுக்காக பல லட்சங்களை செலவு செய்துள்ளார். இந்த சூழலில் பணம் இல்லாதவர்கள் பாதிக்கப்பட்டால் மருத்துவ செலவுக்கு என்ன செய்வார்கள் என யோசித்திருக்கிறார். அவர் இருந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் முழுவதும் நிரம்பி உள்ளதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

அதனால் உடனடியாக சூரத் அடாஜான் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் 85 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றி அமைத்துள்ளார். அதோடு அது சம்பந்தமான தகவல்களை நகர முனிசிபல் கார்ப்பரேஷன்க்கு கூறி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளர். அவர் அமைத்துள்ள மருத்துவமனையை பார்வையிட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் அடுத்த சில தினங்களில் அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவுக்கு 15 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்குவதற்கு வசதியாக தனி அறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் கூறும்போது, “நான் பிறக்கும்போதே பணக்காரனாக பிறக்கவில்லை என் வாழ்வின் ஆரம்ப நாட்களில் நிதி சிக்கலை அதிகம் எதிர்கொண்டேன் அதன் பின் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி இப்போது எனது தேவைக்கு போதுமான அளவு பணம் என்னிடம் இருக்கிறது. அதனால் உதவி தேவைப் படுகின்ற மக்களுக்கு இந்தப் பேரிடர் காலத்தில் என்னால் முடிந்ததை செய்கிறேன்” என்று கூறியுள்ளார். இவர் உருவாக்கிய இந்த மருத்துவமனைக்கு தனது பேத்தியின் பெயரான ஹீபா என்ற பெயரை வைத்துள்ளார். இவரது இச்செயலுக்கு பலரும்  பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |