Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் எடுக்க சென்ற தம்பதி…. நூதன முறையில் ரூ.34 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவருடன் நேற்று முன்தினம் சாத்தூர் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் வெளியே நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் ராமலட்சுமி பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டுள்ளார். அந்த நபர் ஏ.டி.எம் கார்டை வாங்கிக்கொண்டு ஏ.டி.எம் மையத்திற்குள் சென்றுள்ளார்.

இதனையடுத்து உங்களுக்கு சரியாக வேலை செய்யவில்லை என கூறி மற்றொரு ஏ.டி.எம் கார்டை கொடுத்துவிட்டு வாலிபர் அங்கிருந்து சென்றார். பின்னர் ராமலட்சுமியின் வங்கி கணக்கில் இருந்து 34,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து ராமலட்சுமி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |