Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் திருடிய வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரணப்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமி பொன்னமராவதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு வாலிபரிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு ராஜலட்சுமி கூறினார். அந்த நபர் இரண்டு முறை ஏ.டி.எம் கார்டை போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை என கூறி வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை ராஜலட்சுமியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 11 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் ராஜலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நூதன முறையில் பணத்தை திருடிய வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |