Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம்…. பெண்ணை தாக்கிய தம்பதி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியந்தக்கா கிராமத்தில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவகாமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அலமேலு என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக மின் விரோதம் இருந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று அலமேலுவும், அவரது கணவரும் இணைந்து சிவகாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அலமேலு மற்றும் அவரது கணவர் தங்கதுரை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |