Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு தகராறு செய்த மகள்…. தம்பதியினரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாக்கியலட்சுமி என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பாக்கியலட்சுமிக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி புதுச்சேரியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பாக்கியலட்சுமி குடும்பத்தினருடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு தேவையான பணத்தை தருமாறு பாக்கியலட்சுமி தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின் அனைவரும் தூங்க சென்றனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜ் மற்றும் பாரதி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதனையடுத்து மறுநாள் காலை தம்பதியினர் சடலமாக கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |