பார் தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் அம்பிகா நகரில் இருக்கும் டாஸ்மாக் பாரில் விக்னேஸ்வரன் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளக்கிணறு பகுதியில் வசிக்கும் உதயகுமார், பிரேனேஷ் அகிய இருவரும் பாருக்கு மது குடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது வாலிபர்கள் விக்னேஸ்வரனை அழைத்து சில உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் வெளியே சென்றனர். இதனால் விக்னேஸ்வரன் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த உதயகுமார் பிரனேஷ் ஆகிய இருவரும் இணைந்து விக்னேஸ்வரனை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த விக்னேஸ்வரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உதயகுமார் மற்றும் பிரேனேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.