பணம் கையாடல், கொலை வழக்கில் தொடர்புடைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் பணி நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்தன் என்பவர் முன்னதாக பலவூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பொழுது காவல் நிலையத்திற்கு பொருட்கள் வாங்க வழங்கப்பட்ட தொகையை கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை செய்ய உத்தரவிட்டதில் அவரின் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆனந்தனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டார்.
இது போலவே பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பழுவூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில் சென்ற வருடம் என்.ஜி.ஓ.பி காலனி சேர்ந்த முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் அருள் விசுவாசம் என்பவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த கொலை வழக்கில் மணிகண்டன் கைதாகி பணியிடை நீக்கும் செய்யப்பட்டார். இந்நிலையில் துறை ரீதியான நடவடிக்கையாக போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மணிகண்டனை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டார்.