Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு…. பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதில் பெண்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டியங்கொல்லை புது தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருமைதுரை என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமியும் அருமைதுரையும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அந்த புகார்களின் பேரில் பெண்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |