தர்மபுரியில் சொத்து தகராறில் பெற்றோரை மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியில் வசிக்கும் தம்பதிகள் ராமச்சந்திரன் – சின்னராஜி. இவர்களது மகன் ராமசாமி, மகள் சுமதி. இவர்கள் இருவரும் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராமச்சந்திரன், சின்னராஜ் தம்பதியினர் அவர்கள் பெயரில் இருந்த வீட்டு மனையை மகனுக்கும் மகளுக்கும் சரிபாதியாக பிரித்து கொடுத்து உள்ளனர். அந்த நிலத்தில் சுமதி கடைகளுக்கான கட்டிடத்தை கட்டி வந்துள்ளார். அதேபோல ராமசாமியும் அந்த நிலத்தில் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட வேண்டும் என்று ஆசைப்படுள்ளார். ஆனால் அவரிடம் போதுமான பணம் இல்லாத காரணத்தினால் ஒரு பெரும் தொகையை தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
அவர்கள் பணம் கொடுக்க மறுக்கவே கோபத்தில் இருந்த ராமசாமி வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவர்களின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.