கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் பகுதியில் ரம்ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவரது மருமகன் இம்ரான் என்பவரும் தள்ளு வண்டியில் மாட்டு இறைச்சி வருவல் கடை நடத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அண்ணன் தம்பிகளான சாதிக் பாஷா, முஸ்தபா ஆகிய இருவரும் இம்ரானிடம் வறுவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் முஸ்தபா கத்தியால் ரம்ஜான் மற்றும் இம்ரானை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முஸ்தபா மற்றும் சாதிக் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.