வாக்களார்களுக்கு பணபட்டுவாட செய்ய முயன்ற நபரை கைது செய்த போலீசார் 33 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை 20-வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அலுவலர் பரமசிவம் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமாலுதீன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்த பொது 33ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. மேலும் தென்னைமர சின்னம் அச்சடிக்கப்பட்ட நோட்டீசும் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து கீழக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஜமாலுதீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.