பணம் கொடுத்தாலும் தோ்தலில் வெற்றிபெற முடியாது என்று, அ.ம.மு.க., பொதுச் செயலாளா் தினகரன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே வேட்பாளர்களை ஆதரித்து அமமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார். அப்போது தமிழக மக்கள் நலம் பெறவேண்டும், அடிப்படை வசதிகளை பெற வேண்டும் என்பதற்காக, அமமுக கூட்டணி அமைத்து இந்தத் தோ்தலை சந்திக்கிறது. கொரோனாவால், பொதுமக்கள் வீட்டில் முடங்கியிருந்த நிலையில் சிறிய, பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதோடு, அரசு பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
ஆா். கே. இடைத் தோ்தலில் ஆளும் கட்சியினா் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தும் வெற்றிபெற முடியவில்லை. அதேபோலதான், வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் நடக்கும். அமமுகவின் முக்கிய பணி எதிரி திமுகவையும், துரோகி எடப்பாடி பழனிசாமியையும் ஆட்சியில் அமர விடக்கூடாது என்பதுதான். அம்மாவின் கட்சியை மீட்கவே அமமுக தொடங்கப்பட்டது.
கரூரில் தோ்தல் நடக்கவில்லை. வெட்டுக் குத்து தான் நடைபெறுகிறது. இதுவரை 500 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் தோ்தல் ஆணையமே தோ்தலை ரத்துசெய்துவிடும் அளவுக்கு பதவி வெறிக்காக சண்டை நடைபெறுகிறது. காவிரி உபரி நீரை திருமணிமுத்தாற்றில் இணைத்து நிலத்தடி நீா்மட்டம் செறிவூட்டப்படும் என்று அவர் கூறினார்.