Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணம் கொடுத்த வாலிபர்…. நண்பர்களின் செயல்…. போலீஸார் தீவிர விசாரணை ….!!

நண்பரிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  புதுவயல் கிராமத்தில் வீரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பரான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தென்னந்தோப்பு வைப்பதற்காக தனது நண்பர்  பிரபு என்பவரின் சொத்தை அடமானம் வைத்து பணம் தரும்படி வீரசேகரிடம்  கேட்டுள்ளார். இதனை நம்பிய வீரசேகர் தனது நண்பர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில்சுந்தரமூர்த்திபணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து வீரசேகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆலுவலகத்த்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூப்பிரண்டு  செந்தில்குமார் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி  காவல்துறையினர் பணத்தை வாங்கிய சுந்தரமூர்த்தி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த பிரபு கீர்த்தனா, தங்கப்பன் ஆகிய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |