குடிக்க பணம் தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீரமாங்குடி பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதி மன்னவர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுருதி மன்னர் தனது குடும்பத்தினரிடம் குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுருதி மன்னவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுருதி மன்னரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுருதி மன்னர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சுருதி மன்னரின் மனைவி ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.