அண்ணன் குடிக்க பணம் தராததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பரங்கிரிநாதர் புரத்தில் அலெக்ஸ்ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரன் ராஜாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்க்கு ராஜா பணம் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த அலெக்ஸ்ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலெக்ஸ்ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.