Categories
தேசிய செய்திகள்

பணம் தர மறுத்த மனைவியை…. தடியால் கொன்ற 92 வயது முதியவர்…. கைது செய்த போலீசார்…!!

முதியவர் ஒருவர் உதவித்தொகை பணம் தராத தனது மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் சாமுவேல்(92)-அப்ரயம்மா(90). இவர்களுக்கு ஆந்திர அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை மாதாமாதம் 2,250 ரூபாய் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த உதவித்தொகையை வாங்குவது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இத்தம்பதியினர் இருவரும் 10 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்த உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அப்ரயம்மா கைக்கு தான் வரும்.

எனவே வழக்கம்போல தனது பங்கை வாங்க வந்த சாமுவேலிடம் அப்ரயம்மா பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சாமுவேல் அவர் கையில் வைத்திருந்த தடியைக் கொண்டு மனைவியை அடித்துள்ளார். இதனால் தலையில் அடிபட்ட அப்ரயம்மா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்ரயம்மாவின் சடலத்தை கைப்பற்றி, சாமுவேல் மீது கொலை வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |