Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் தர முடியுமா…? முடியாதா…? வாலிபருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை தீன் நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மேலநத்தம் பகுதியை சேர்ந்த குமரேசன், சுதாகர், சுரேந்தர் ஆகிய 3 பேரும் கத்தியை காட்டி கார்த்திக்கிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுதாகர், சுரேந்தர், குமரேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |