Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பணம் வரவில்லை” ஏ.டி.எம் எந்திரத்தை அரிவாளால் உடைத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலக்குண்டு வடக்கு தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற வாலிபர் கார்டை எந்திரத்தில் சொருகி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் வரவில்லை. இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் மீண்டும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பிறகு அந்த வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை அரிவாளால் சரமாரியாக உடைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த சுதன் என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் இருக்கும் பலசரக்கு கடையில் பணிபுரிந்து வருகிறார். ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் வராத கோபத்தில் அதனை அரிவாளால் உடைத்ததாக சுதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுதனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |