பண வீக்கத்தை குறைப்பதற்காக வங்கியில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி எரிபொருள் தட்டுப்பாட்டு காரணமாக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருளை வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்னிய செலவாணி தற்போது குறைந்துள்ளதால் பணவீக்கமானது அதிகரித்துள்ளது. இந்த பண வீக்கத்தை குறைப்பதற்கு மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி நிலையான கடன் வசதி விகிதம் 15.50 சதவீதமும், நிலையான வைப்பு வசதி விகிதம் 14.50 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.