ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்தித்து கூறியிருப்பதாவது, ரெப்போ வட்டி விகிதம் 4 % ஆக நீடிக்கும். எனினும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாகவே தொடரும். இதனிடையில் ரெப்போவட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது.
வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ தரக்கூடிய கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டியானது 3.35 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கிடையில் பணவீக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கொரோனா காரணமாக பொருளாதாரம் உயர்ந்தாலும் ஐரோப்பாவின் மோதல்கள் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது. மேலும் வெளித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் சரிசமமான மட்டத்தில் இருக்கிறது என்று கூறினார்.