Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பணிகள் நடக்கவில்லை”….. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…..!!!!!!!!

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு சபரி நித்யா தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வரவு செலவு கணக்குள் பற்றி விவரம் கேட்டதாக தெரிகின்றது. இதனை அடுத்து கணக்குகளை கொடுக்காமலும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காததை கண்டித்து 4 உறுப்பினர்கள் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி தலைவர் ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் போன்றோர் கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின் உறுப்பினர்கள் மன்ற   கூட்டரங்கில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி  போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கூறியபோது 1 வது வார்டில் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் பணத்தை எடுத்து இருக்கின்றனர். இதேபோல் எந்த பணிகளையும் முடிக்காமல் ஊராட்சி கணக்கில் இருந்து பணத்தை மட்டுமே எடுத்துக் கொள்கின்றார்கள். மேலும் ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கேட்டால் கொடுப்பதில்லை. இது தொடர்பாக கேட்டால் சரியான பதிலும் அவர்கள் தெரிவிப்பதில்லை.

ஊராட்சி பகுதியில் புதிதாக குடியிருப்பு வீட்டுமனைகள் அமைக்க அனுமதி கொடுக்கும்போது அங்கு மேல்நிலைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திருக்க வேண்டும். ஆனால் எந்தவிதமான வசதியும் செய்யாமல் அனுமதி கொடுத்துள்ளனர். மேலும் ஊராட்சி நிர்வாகத்தில் பணம் இருந்தும் எந்த பணிகளும் மேற்கொள்வது இல்லை. இது பற்றி மாவட்ட கலெக்டர் இடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை மற்றும் தெருவிளக்குகள் சரிவர பராமரிப்பது இல்லை. அதனால் இது பற்றி ஊராட்சியில் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |